This Article is From Oct 30, 2018

ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம்

புகார்தாரரிடமிருந்து அதிகாரி கே.சக்தி ரூ.25,000 லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கியதாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம்

லைட் ஹவுஸ் இயக்குநருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chennai:

சென்னையில் ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கிய மூத்த அதிகாரியான லைட் ஹவுஸ் இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒப்பந்த பணிகளுக்காக மணி, என்பவரிடமிருந்து லைட் ஹவுஸ் இயக்குநர் கே.சக்தி ரூ.25,000 லஞ்சம் பெற்றதாக, மணி அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவு 2014ல் வழக்கு பதிவு செய்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் அதிகாரி சக்தி ரூ.25,000 லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடிப்பட்டார் என அதில் கூறப்பட்டுள்ளது. 

சிபிஐ வழக்கு சிறப்பு நீதிபதி திருநீல பிரசாத் அதிகாரி சக்திக்கு  3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபதாரமும் விதித்து உத்தரவிட்டார்.
 

.