This Article is From Sep 25, 2018

“சிலை திருட்டு வழக்கை விசாரிக்க முடியாது”- உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சிலை திருட்டு(Idol Theft) குறித்து விசாரணை நடத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

“சிலை திருட்டு வழக்கை விசாரிக்க முடியாது”- உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

தமிழகத்தில் சிலை திருட்டு (Idol Theft) தொடர்பான வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. இது திருப்திகரமாக இல்லை என்று கூறி, வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவசர கதியில் அரசு முடிவு செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சிபிஐ-யில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சிலை திருட்டு வழக்கை விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. சீனிவாசன் சிபிஐ-யின் எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பித்தார். அதில் போதிய ஆட்கள் இல்லாததால் கூடுதலாக சிலை திருட்டு வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்தி     வைக்கப்பட்டுள்ளது. 

.