கைது செய்யப்பட்ட 5 பேரும் கோயம்புத்தூர் சிறைச்சாலையில் நீதித்துறை காவலில் உள்ளனர்.
New Delhi: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வசந்தகுமார், சபரீராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பொள்ளாச்சி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு பின் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் முதல் கட்டவிசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த பாலியல் வன்கொடுமையானது “திட்டமிட்டு, கும்பலால் நடத்தப்பட்ட குற்றம்” என்று தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் வழக்கமான தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியது, மிரட்டல், கொள்ளை, சைபர் கிரைம், ஆகிய குற்றங்களின் கீழ் ஐவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் கோயம்புத்தூர் சிறைச்சாலையில் நீதித்துறை காவலில் உள்ளனர்.