हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 31, 2019

உன்னாவ் விபத்து: பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்கு

இந்த சம்பவம் விபத்து அல்ல சதி என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐயின் வசம் சென்றது. சிபிஐ பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

இந்த விபத்தில் உடன் சென்ற இரு பெண்கள் பலியாகினர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர்.

New Delhi:

உத்தர பிரதேசம் உன்னாவ் நகரில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து  குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது  சிபிஐ இன்று வழக்குபதிவு செய்துள்ளது. 

உத்தர பிரதேச மாநில எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது அவரது வீட்டில் ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குல்தீப் சிங் செங்கார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு செங்காரை போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண் அவரின் உறவினர் இன்னும் சிலர் காரில் வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரைச் சந்திக்க சென்றபோது ஞாயிற்றுக் கிழமை சென்றனர். அப்போது சாலையில் இவர்கள் சென்ற காரின் மீது லாரி ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடன் சென்ற இரு பெண்கள் பலியாகினர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர்.

Advertisement

இந்நிலையில் இந்த சம்பவம் விபத்து அல்ல சதி என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐயின் வசம் சென்றது. சிபிஐ பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 

Advertisement