Read in English
This Article is From Sep 21, 2019

INX Case: ‘பிணை கொடுக்கவே கூடாது…’- வாதங்களை அடுக்கிய சிபிஐ, ப.சிதம்பரத்துக்கு இறுகும் பிடி!

‘சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால், ஊழல் வழக்குகளில் அது தவறான முன்னுதாரணத்தை வைத்துவிடும்'

Advertisement
இந்தியா Edited by

வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பு, அவருக்கு பிணை கொடுக்கப்படவே கூடாது என்று சொல்லி, வாதங்களை அடுக்கியுள்ளது

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பிணை கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பு, அவருக்கு பிணை கொடுக்கப்படவே கூடாது என்று சொல்லி, வாதங்களை அடுக்கியுள்ளது. ‘இந்த வழக்கில் சிதம்பரம் பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பொதுப் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்' என்று வாதம் வைத்துள்ளது சிபிஐ.

மேலும், ‘சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால், ஊழல் வழக்குகளில் அது தவறான முன்னுதாரணத்தை வைத்துவிடும். பொது நம்பிக்கையை குலைக்கும் செயலாகவும் அது மாறும்' என்று நீதிமன்றத்திடம் கூறியது சிபிஐ.

சில நாட்களுக்கு முன் வழக்கு விசாரணையின்போது, “முன்னர் எனது அறைக்கு வெளியே இருக்கைகள் இருந்தன. அதில் நான் அமர்ந்திருப்பேன். தற்போது, அதுவும் நீக்கப்பட்டுவிட்டன. நான் பயன்படுத்திய காரணத்திற்காகவே அந்த இருக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. தற்போது சிறை வார்டன் கூட இருக்கை இல்லாமல்தான் உள்ளார்” என்று தெரிவித்தார் ப.சிதம்பரம்.

Advertisement

கடந்த 2017 ஆகஸ்டில் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் கணக்கில் வராத ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisement