Read in English
This Article is From Jul 30, 2018

போலி என்கவுன்டர்கள்: சி.பி.ஐ இயக்குநரை காய்ச்சி எடுத்த நீதிபதிகள்

போலியாகவும் செய்யப்பட்ட என்கவுன்டர்களில் குற்றவாளிகளை கைது செய்யாதது குறித்து சி.பி.ஐ இயக்குநர் அலோக் வெர்மாவை, உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது

Advertisement
இந்தியா ,
New Delhi:

மணிப்பூரில் அனுமதியின்றியும் போலியாகவும் செய்யப்பட்ட என்கவுன்டர்களில் குற்றவாளிகளை கைது செய்யாதது குறித்து சி.பி.ஐ இயக்குநர் அலோக் வெர்மாவை, உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.

போலீஸ், ராணுவம் மற்றும் அசாம் ரைஃபில்ஸ் படையினரால் காரணம் இன்றி கொல்லப்பட்டதாக 1,528 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் நான்கு வழக்குகளுக்கு சி.பி.ஐயிடம் குற்றப்பத்திரிக்கை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. ஜூலை 27-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் முன்னர் சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தனர். ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், சி.பி.ஐ இயக்குநரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

“14 பேர் கொல்லப்பட்டதாக வழக்கு உள்ளது. இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர்” என்றனர் நீதிபதிகள்.

மேலும், 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது, ஆகஸ்ட் மாதம் மேலும் 5 தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ தரப்பில் கூறப்பட்டது. ஆனால் திருப்தி அடையாத நீதிபதிகள் “ இறந்த போன பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறீர்கள்” என்று கடுகடுத்தனர்.

Advertisement

ஆனால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் அதிகமாக இருப்பதாக கூறினார். நீதிமன்றம் 7 நடைமுறைகளில் இரண்டை மட்டும் செய்யவும், மேலும் 12 கூடுதல் அதிகாரிகளையும் சிறப்பு விசாரணையில் ஈடுபடுத்தினால், வேகமாக முடிக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர். இந்த சிறப்பு விசாரணைக் குழு கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம். அன்றும் சி.பி.ஐ இயக்குநர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement