বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 25, 2019

நில மோசடி புகார்: அரியானா முன்னாள் முதல்வர் வீடு, இடங்களில் சிபிஐ சோதனை

அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் மீது கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

Advertisement
இந்தியா

டிசம்பரில் சிபிஐ அதிகாரிகள் பூபிந்தர் சிங் ஹூடா மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

Rohtak:

நில மோசடி புகார் தொடர்பான வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 

அரியானா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் ஹூடா கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான அசோசியேட்டட் ஜேனல்ஸ் குழுமத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முதல்வர் பூபிந்தர் சிங் நிலத்தை ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. 

இதன்பின்னர் இந்த விவகாரம் சிபிஐ-க்கு சென்றது. இதில், நிலத்தை ஒதுக்கீடு செய்தது, இடமாற்றம் செய்தது தொடர்பாக அரசுக்கு ரூ. 67 லட்சம் இழப்பீடு ஏற்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

இதில் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் இன்றைக்கு பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 
 

Advertisement