This Article is From Jan 03, 2019

மத்திய அரசு ஊழியர்களின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்த சிபிஐ!

மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு சுமார் 206 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்த சிபிஐ!

மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு சுமார் 206 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

New Delhi:

புதுடில்லி: மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 206 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆண்டு நவம்பர் வரை மத்திய புலனாய்வு துறையால் (சிபிஐ) மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 45 பேர் நபர்கள் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிங் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் அளித்த பதிலில் கடந்த 2017-லில் 338 வழக்குகளும், 2018 ல் 400 வழக்குகளும், 2016 மற்றும் 2015 ஆம் அண்டுகளில் 400 மற்றும் 441 வழக்குகள் பதிவானதாக தகவல் அளித்தார்.

அதைதொடர்ந்து அவர் வெளியிட்ட தகவல்கள் படி 2017 ஆம் ஆண்டு 168 குற்றப்பத்திரிகைகளும், 2016 ஆம் ஆண்டு 272 குற்றப்பத்திரிகைகளும், 2015-ஆம் ஆண்டு 361 குற்றப்பத்திரிகைகள் மட்டுமே வெளியானதாக தகவல் கூறினார்.

மேலும் அரசு அதிகாரிகளின் மேல் எழும் புகார்களை விசாரிக்கும் தனது அமைச்சரகத்தை 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அவர் கூறினார்.

உள்துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2015 முதல் 2017 வரை) மூன்று இந்திய போலீஸ் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்திய வனத்துறையினர் (IFS) அதிகாரிகளுக்கு எதிரான 16 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு வழக்குகளில் வழங்கப்பட்டன.

.