বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 31, 2018

முக்கியப் பிரமுகர்கள் பயன்படுத்திய தனியார் விமானங்களில் பணம் கடத்தப்பட்டதா? சிபிஐ சந்தேகம்

இந்தியாவுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் தனியார் விமானங்கள் மூலம் பணம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகம்

Advertisement
இந்தியா
New Delhi:

இந்தியாவுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் தனியார் விமானங்கள் மூலம் பணம் கடத்தப்பட்டதா என்று அமலாக்கத் துறை ஆராய்ந்து வருகிறது. இது நாட்டின் விமானப்போக்குவரத்துப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை இன்னும் தொடக்ககட்டத்தில்தான் இருக்கிறது என்றபோதிலும், விஐபிக்கள் பயன்படுத்தும் தனியார் விமானங்களில் பணக்கட்டுகள் இரகசியமாகப் பதுக்கப்பட்டு, சோதனையில் சிக்காமல் கடத்தப்பட்ட நிகழ்வுகள் சிலமுறை நடைபெற்றிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இதில் விமானங்களின் உரிமையாளர்களோ அதனைப் பயன்படுத்திய முக்கியப் பிரமுகர்களோ ஈடுபட்டதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் செய்தியாளரும் தொழிலதிபருமான உபேந்திரா ராய் என்பவர் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவிடம் போலியான தகவல்கள் அளித்து விமான நிலைய (aerodrome) நுழைவுச்சீட்டு பெற்றுள்ளார். இதனைக் கடந்த மே மாதம் சிபிஐ கண்டுபிடித்து அந்நபரைக் கைது செய்தது. இதனையடுத்தே இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட நுழைவு அனுமதிச் சீட்டு (entry pass) நாட்டின் எல்லா விமான நிலையங்களிலும் செல்லுபடியாகும் ஒன்றாகும். உபேந்திரா ராய், தனியார் விமானங்களை இயக்கும் ஒன் இந்தியா நிறுவனத்தின் செயலர்கள், சில முக்கிய விமான நிலைய அதிகாரிகள் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. எனினும் நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்குமான நுழைவுச் சீட்டினை ராய் பெற்றதன் உள்நோக்கம் என்ன என்பதுபற்றி விசாரணை அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. 

Advertisement