அரேபிய கடலில் தேடலை நடத்துவதற்கான கோரிக்கை அமைச்சகத்தின் அனுமதிக்காக நிலுவையில் இருந்தது.
Pune: பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைக் கண்டுபிடிக்க அரேபிய கடலில் தேடுதல் வேட்டை நடத்த மகாராஷ்டிராவின் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய புலனாய்வு துறை புனே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரேபிய கடலில் தேடலை நடத்துவதற்கான கோரிக்கை அமைச்சகத்தின் அனுமதிக்காக நிலுவையில் இருந்தது. இந்த தேடல் பணிக்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர தபோல்கர் ஆகஸ்டு 20, 2013 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கர் வழக்கில் வழக்கறிஞர் சஞ்சீவ் புனேலக்கர் குற்றவாளி சரத் கலாஸ்கருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் புனேலக்கர் புனே கோர்ட்டி ரூ. 30,000 கட்டி பெயில் பெற்றது குறிப்பிடத்தக்கது.