'புல்' எனும் ப்ரைம்டைம் ஷோவை நடிகை எலிசா துஷ்கு நடத்தி வந்தார்.(AFP)
New York: அமெரிக்க தொலைக்காட்சி நெட்வொர்க்கான சிபிஎஸ் 'புல்' எனும் ப்ரைம்டைம் ஷோவுக்கான நடிகை எலிசா துஷ்குவிற்கு 9.5 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்கியுள்ளது. அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுக்காக இது வழங்கப்பட்டுள்ளது.
மைக்கேல் வெத்ர்லி எனும் முன்னணி நடிகர் நிகழ்ச்சி தயாரிப்பின் போது துஷ்குவின் உடலமைப்பு குறித்து வர்ணித்தும், ஆபாச ஜோக்குகளை கூறியும் துன்புறுத்தியுள்ளார். இது குறித்து விசாரித்தபோது, நடிகர் தவறாக பேசியதை ஒப்புக்கொண்டார். துஷ்கு, தனது நிலையை தயாரிப்பு குழுவிடம் கூறியிருக்கிறார். ஆனால் எந்த பயனும் இல்லாததால், புகார் அளித்தார். தனது கான்ட்ராக்ட் படி இழப்பீடாக தான் பணிபுரிந்தால் எவ்வளவு தொகை கிடைக்குமோ அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் இதே நிறுவனம் தனது சிஇஓவை பாலியல் புகாருக்காக பணிநீக்கம் செய்தது. அதற்கு முன்பு தொகுப்பாளர் சார்லி ரோஸ் 8 பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததற்காக வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து தொலைக்காட்சி நிறுவனம் கூறும்போது ''எலிசா துஷ்கு தனது புகாரில் பாதுகாப்பு, மரியாதையான பணியிட சூழல் குறித்து புகார் அளித்தார். அதை விசாரிக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" என்றது.
இந்த புகாருக்கு பதிலளித்துள்ள நடிகர் வெதர்லி ''நான் ஷூட்டிங்கின் போது சில ஜோக்குகளை கூறுவது வழக்கம். ஆனால், எலிசா துஷ்கு இது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதும் அதனை நிறுத்தி கொண்டேன், அவரை இது கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்" என்று கூறியுள்ளார்.