Read in English
This Article is From Jul 09, 2020

“CBSE பாடத்திட்டங்கள் குறைப்பு சம்பந்தமாக தவறான கதை உருவாக்கப்படுகிறது”: மனிதவள அமைச்சர்

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியிருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி மதச்சார்பின்மை பாடதிட்டம் நீக்கம்
  • 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும்: CBSE
  • அவர்கள் பரபரப்பை நாடுகிறார்கள்: மனிதவளமேம்பாட்டு அமைச்சர் ரமேஷ்போக்ரியால்

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது முடங்கியுள்ளன. இந்நிலையில் பல பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடுத்த 2020-21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவிகிதம் குறைக்கப்படுவதாக நேற்று சிபிஎஸ்இ நேற்று அறிவித்திருந்தது.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியிருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து சில பாடங்களை நீக்கியிருந்தது சம்பந்தமாக பல வர்ணனைகள் வந்துள்ளன. தவறான கதைகளை சித்தரிக்க தலைப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்கள் பரபரப்பை நாடுகிறார்கள்" என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், மேற்கண்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று டிவிட் செய்துள்ளார்.

Advertisement
Advertisement