Read in English
This Article is From Aug 23, 2019

டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தும் மாநில அரசு!!

சி.பி.எஸ்.சி. பாடப் பிரிவின் கீழ் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை மாநில அரசு செலுத்தும் என்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார்.

Advertisement
இந்தியா Edited by

டெல்லியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

New Delhi:

டெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 10,12-ம் வகுப்பு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750-லிருந்து ரூ. 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 


எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 375-ல் இருந்து ரூ. 1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 5 பாடங்களுக்கு உரியதாகும். 

இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'டெல்லி அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்'  என்று மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Advertisement


இதேபோன்று, மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று டெல்லி பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. 


10 மற்றும் 12-ம் வகுப்புக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைப் போன்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர்த்தியுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement