This Article is From Dec 24, 2018

10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணையை அறிவித்தது சி.பி.எஸ்.இ.

சி.பி.எஸ்.இ. 12- வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகின்றன. 10-ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது.

10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணையை அறிவித்தது சி.பி.எஸ்.இ.

தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரைக்கும் நடைபெறும்.

New Delhi:

மத்திய பள்ளிக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு தேதிகளை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம்தேதி வரைக்கும் நடைபெறுகின்றன.

10-ம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தொடங்கி மார்ச் மாதம் 29-ம்தேதி நடைபெறுகின்றன. இந்த நாட்களுக்கு இடையே போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை சி.பி.எஸ்.இ. உறுதி செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜே.இ.இ. மெய்ன் தேர்வுகள் நடைபெற்றதால், 12-ம் வகுப்பு இயற்பியல் பாடம் மற்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை

தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரைக்கும் நடைபெறும். இருப்பினும் விடையளிக்கும் தாள்கள் காலை 10 மணிக்கு வழங்கப்படும். கேள்வித் தாள்கள் காலை 10.15-க்கு அளிக்கப்படும்.

12-ம் வகுப்புக்கு 40 வெகேஷனல் பாடங்களை சி.பி.எஸ்.இ. அளிக்கிறது. 10-ம் வகுப்பை பொறுத்தவரை 15 வெகேஷனல் வகுப்புகள் இந்த பாடத்திட்டத்தில் உள்ளன. இதற்கான தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளன. இதில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் டெல்லி பல்கலைக் கழகத்தில் அட்மிஷன் வழங்கப்படும் என்பதால், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வுகள் நடந்திருக்கின்றன.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் டெல்லி பல்கலைக் கழகத்தில் அட்மிஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து,சி.பி.எஸ்.இ. தேர்வு கண்காணிப்பாளர் சன்யார் பரத்வாஜ் கூறுகையில், டெல்லி பல்கலைக் கழக அட்மிஷன்களுக்கு ஏற்ற வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

.