Read in English
This Article is From May 02, 2019

+2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: 499 மதிப்பெண் பெற்று 2 மாணவிகள் முதலிடம்!

CBSE Results 2019: இதில், 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா என்ற 2 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)
New Delhi:

12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 2 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். 13 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு கடந்த பிப்.16ஆம் தேதி தொடங்கியது.

இதில், 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா என்ற 2 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in மற்றும் cbse.nic.in. இணையதளங்களில் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முடிவுகளை காணலாம்.

ரிஷிகேஷை சேர்ந்த கெளராங்கி சாவ்லா, ரேபேரேலியை சேர்ந்த ஐஷ்வர்யா, ஹரியானவை சேர்ந்த பாவ்யா ஆகிய 3 பேரும் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

Advertisement

இதில், மத்திய அரசால் இயக்கப்படும் கேந்திரியா வித்யாலயா பள்ளி 98.54 சதவீதம் தேர்ச்சியும், ஜவஹர் நவோதியா வித்யாலயா பள்ளி 96.62 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

தேர்வு நடந்த முடிந்த 28 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது, தேர்வும் முன்கூட்டியே நடைபெற்றது.

Advertisement

அதேபோல், வழக்கமாக தேர்வு முடிவுகளும் மே மாதம் 3 வாரத்திலே வெளியிடப்படும், ஆனால், இம்முறை முடிவுகளும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement