This Article is From Sep 14, 2018

சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு பலாத்காரமா!?- ஹரியானாவில் அதிர்ச்சி

சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி, ஹரியானாவில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வந்துள்ளது

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குற்றம் குறித்த புகாரை பதிவு செய்ய போலீஸ் மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Gurgaon:

சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி, ஹரியானாவில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வந்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்ததற்காக அந்த மாணவி, ஜனாதிபதி கையில் விருது வாங்கியுள்ளார். 

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி, ரெவாரியில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்துக்கு சென்ற போது அவரை 3 மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். கார் மூலம் பெண்ணைக் கடத்திய மர்ம நபர்கள், யாரும் இல்லாத இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. 

பெண்ணை அழைத்துச் சென்ற இடத்தில் முன்னரே, சிலர் காத்திருந்தனர் எனவும், அவர்கள் மாணவியை கதற கதற பலாத்காரம் செய்துள்ளார்கள் எனவும் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தன்னை பலாத்காரம் செய்தவர்கள் எல்லாம், தன் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்தப் பெண் போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, போலீஸ் அவர்களின் புகாரை ஏற்க மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இறுதியாக இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

.