This Article is From Jul 31, 2019

’காஃபி டே’ உரிமையாளர் தற்கொலை: தொழில் முனைவோருக்கு ஆனந்த் மகேந்திரா அறிவுரை!

’கஃபே காஃபி டே’ உரிமையாளர் சித்தார்த்தா திங்களன்று இரவு முதல் மாயமான நிலையில், தொடர்ந்து, 36 மணி நேரம் நடந்த தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

’காஃபி டே’ உரிமையாளர் தற்கொலை: தொழில் முனைவோருக்கு ஆனந்த் மகேந்திரா அறிவுரை!

தொழில் முனைவோர் தங்கள் தொழில் தோல்வி காரணமாக தங்கள் சுயநம்பிக்கையை இழக்கக்கூடாது - ஆனந்த் மகேந்திரா

Mumbai:

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், 'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தாவின் மரணம் உறுதி செய்யப்பட்டு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தொழில் முனைவர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கருத்து தெரிவித்துள்ளார். 

'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில், சித்தார்த்தாவை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது, அவரின் நிதி சூழ்நிலைகள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாயாமாவதற்கு முன்பு தனது ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கடும் கடனில் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

தொழில் முனைவோர் தங்கள் தொழில் தோல்வி காரணமாக தங்கள் சுயநம்பிக்கையை இழக்கக்கூடாது. இது தொழில் முனைவோருக்கு அழிவை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா திங்களன்று இரவு முதல் மாயமான நிலையில், தொடர்ந்து, 36 மணி நேரம் நடந்த தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 6.30 மணி அளவில் மீனவர்களால் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் சித்தார்த்தா 'லாபகரமான தொழிலை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டேன்' என தன் காஃபி டே ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன்.
 

mceetvug


நான், என்னுடைய அனைத்தையும் கொடுத்துவிடுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில நாள்களுக்கு முன்பு, என் நண்பரிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன்.

நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர். நான் நீண்ட காலமாக போராடினேன், ஆனால் இன்று என்னால் எந்த அழுத்தத்தையும் எடுத்துச்செல்ல முடியாததால் கைவிடுகிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

கடந்த 2017 செப்டம்பர் மாதம் சித்தார்த்தாவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக காஃபி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய காஃபி பீன் ஏற்றுமதியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். 

'கஃபே காஃபி டே' நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் 1,700 கடைகள் உள்ளன. இது தவிர மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கிளைகள் உள்ளன. 
 

.