This Article is From Feb 21, 2019

மும்பையில் மாலில் புகுந்த சிறுத்தை..!

கடந்த புதன் காலை 5.30 மணி அளவில் சிறுத்தை ஒன்று கொரம் மாலில் சுற்றித்திரியும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

மும்பையில் மாலில் புகுந்த சிறுத்தை..!

மாலில் திரிந்த சிறுத்தை சிசிடிவி-யில் பதிவானது

சிறுத்தையை போட்டோவில் பார்த்திருப்போம், டிவியில் பார்த்திருப்போம், கூண்டில் கூட பார்த்திருப்போம் ஆனால் மனிதர்கள் செல்லும் மாலில் கம்பீரமா நடந்து பார்த்திருக்கோமா?

ஆம். மும்பை அருகில் உள்ள கொரம் மாலில்தான் சிறுத்தை ஒன்று கம்பீரமாக நடந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கடந்த புதன் காலை 5.30 மணி அளவில் சிறுத்தை ஒன்று கொரம் மாலில் சுற்றித்திரியும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

மாலில் இருந்து மக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்ற சிறுத்தையை வனஅதிகாரிகள் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் இருந்துதான் இந்தச் சிறுத்தை தப்பித்து வந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. சிசிடிவி-யில் பார்த்தபோது ஏதோ ஒரு விலங்குதான் என எண்ணப்பட்டது. பின்புதான் அது சிறுத்தை என கண்டறியப்பட்டது.

சில தினங்களுக்கு முன், பஞ்சாபில் அட்டூழியம் செய்த சிறுத்தை ஒன்றை வன அதிகாரிகள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மனித – விலங்கு வாழ்விட பிரச்னை சில ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டும் இல்லை, அமெரிக்காவில் கூட சமீபத்தில் மலைச் சிங்கம் ஒன்றை மக்கள் வாழும் பகுதியில் இருந்து வன அதிகாரிகள் பிடித்தனர்.

.