This Article is From Aug 24, 2020

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவம் சீனாவை எதிர்கொள்ளும்; பிபின் ராவத் அதிரடி!

கடந்த 50 ஆண்டுகளில் இருநாட்டு வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் மிக மோசமானதாக இச்சம்பவம் கருதப்படுகிறது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவம் சீனாவை எதிர்கொள்ளும்; பிபின் ராவத் அதிரடி!

இந்தியா-சீனா ராணுவ வீர்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் சமீபத்தில் உயிரிழந்தனர்.

ஹைலைட்ஸ்

  • லடாக்கில் ஊடுருவல்கள் தொடர்பாக சீனாவை சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது
  • இருதரப்பினருமிடையே பேச்சு வார்த்தைகள் நிலவி வருகின்றன
  • இரு நாட்டு படைகளும் பின்வாங்க வேண்டும் என்பதே ஒப்புக்கொள்ளப்பட்டது
New Delhi:

சமீபத்தில் இந்தியா-சீன எல்லை பகுதியில் ஏற்பட்ட இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சீனாவைச் சேர்ந்த மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் தற்போது, “லடாக்கில் ஊடுருவல்கள் தொடர்பாக சீனாவை சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது.” என பாதுகாப்பு தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எல்லையில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து  இருதரப்பினருமிடையே பேச்சு வார்த்தைகள் நிலவி வருகின்றன. முதல் கட்டமாக சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்க வேண்டும் என்பதே ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்னும் பின்வாங்கும் நடவடிக்கைகள் முழுமைப்பெறவில்லை.

கடந்த 50 ஆண்டுகளில் இருநாட்டு வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் மிக மோசமானதாக இச்சம்பவம் கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பிபின் ராவத் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “இராணுவம் மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மட்டுமே ராணுவ நடவடிக்கைகள் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார். எனினும், சீன படைகளை பின்வாங்க வைக்க இந்தியா பின்பற்ற இருக்கும் பாணி குறித்து எவ்வித தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

தற்போது பிங்கர் 5,6 மலைத்தொடர் சரிவுகளில் உள்ள நிலைகளை சீனா ஆக்கிரமித்துள்ளதை செயற்கைகோள் படங்கள் உறுதி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

.