This Article is From Aug 17, 2019

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்! இந்திய வீரர் உயிரிழப்பு!!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த மாதம் நடந்த தாக்குதலின்போது 2 வீரர்கள் மற்றும் 10 மாத குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்! இந்திய வீரர் உயிரிழப்பு!!

நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது.

Jammu:

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் இந்தை அத்துமீறல் நடந்துள்ளது. 

2 நாட்களுக்கு முன்பாக இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் புகார் தெரிவித்த நிலையில் எல்லையில் அத்துமீறல் நடந்திருக்கிறது. 

இந்த சம்பவத்தில் டேராடூனை சேர்ந்த நாயக் சந்தீப் தாபா (35) படுகாயங்களுடன் உயிரிழந்தார். இன்று காலை 6.30-க்கு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. 

இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 

கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் 10 மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.