Read in English
This Article is From Jun 11, 2019

மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது!!

மத்தியில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

மத்தியில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமைச்சரவை கூட்டத்தின்போது வருங்காலங்களில் செய்ய வேண்டிய பணிகள், திட்டங்கள் நிறைவேற்றுதல் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர்கள் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், அப்போது ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. 

இதில் எதிர்க்கட்சிகள் பல பிரச்னைகளை எழுப்ப ஆயத்தமாகி உள்ளதால், அதற்கு பதில் அளிக்க இணை அமைச்சர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள். 

Advertisement

பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement