இதுகுறித்து நாகையில் இன்று செய்தியார்களை சந்தித்த அவர்,
சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கென தனித்தனி வாயில்கள் மற்றும் கை கழுவுமிடம் அமைத்து, பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். நிர்வாகம் தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.
5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்ந்ததற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலை மாறி வருகிறது. தமிழகத்தில் எந்த கட்சியோடும் பாஜகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது வேடிக்கையானது. தேடி வந்து கொடுத்தாலும் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வந்தவன் நான். குமரி மாவட்டத்தில் ஒரு திட்டங்கள் கூட நடைபெறாத போது வராதவர்கள் இப்போது வந்துள்ளார்கள். இங்கு மதம், ஜாதி பிரச்சனையை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.
அதிமுக மூழ்கும் கப்பல் எனத் திமுக-வில் சேர்ந்த பிறகு, செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அந்தக் கப்பலில்தான் சிறிது நாள்கள் அவர் துணை கேப்டனாக இருந்தார். எந்த கட்சியுடனும் பாஜகவின் உறவில் விரிசல் இல்லை என்று அவர் கூறினார்.