This Article is From Feb 13, 2019

மத்திய அரசும், தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக உள்ளது: கே.எஸ்.அழகிரி

மத்திய அரசும், தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக உள்ளது: கே.எஸ்.அழகிரி

மத்திய அரசும், தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக உள்ளது: கே.எஸ்.அழகிரி

மத்திய அரசும், தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மத்திய அரசும், தமிழக அரசும் தோல்வி அடைந்த அரசாங்கமாக இருந்து வருகிறது. மத்திய அரசு தற்போது பல்வேறு சலுகைகள் அறிவித்து உள்ளது. தமிழக மக்களின் மனநிலை இந்த 2 அரசையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இருந்து வருகிறது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தினால் செலவும் குறையும்.

தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற அணிகள் செயல்பட்டு வருகிறது. எங்கள் அணி கொள்கை ரீதியான அணி. தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க ஒரு அமைப்பு வேண்டும். தமிழகத்தில் உள்ள பல திட்டங்களை முன்வைத்து தான் எங்கள் மதசார்பற்ற கூட்டணி அமைந்து உள்ளது.

தற்போது தமிழக அரசு வழங்க கூடிய 2000 ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள். தமிழ்நாட்டின் அரசியலே தேர்தல் வருவதற்கு முன்பு மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கொள்கை. அதுதான் அவர்களின் நடைமுறையாகும். இதனை எல்லாம் மீறி தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

காங்கிரஸ் கட்சி தற்போது மூன்று மாநிலங்களில் தேர்தலில் வெற்றிபெற்று 48 மணி நேரத்தில் விவசாய கடனை ரத்து செய்தது என்று அவர் கூறியுள்ளார்.

.