This Article is From Oct 30, 2018

மாநில அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசு: தம்பிதுரை பகீர் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாநில அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசு: தம்பிதுரை பகீர் குற்றச்சாட்டு!

karur: நிதியை வைத்துக்கொண்டு மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 18 ஆயிரம் கோடியே இதுவரை வழங்கப்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள் செய்ய தமிழகத்தில் போதிய நிதி இல்லை. கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

மத்திய அரசு நிதியை வைத்துக்கொண்டு மாநில அதிகாரங்களை பறிக்கிறது. மத்திய அரசு திட்டங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் மட்டும் செய்கிறார்களே தவிர, மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்கவதில்லை.

காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட இரு கட்சிகளும் மாநில அரசின் அதிகாரங்களை பறித்து கொண்டன. பிரதமர் நரேந்திர மோடி நல்லவர் தான். ஆனால் மாநில அரசின் நிதியை கொடுப்பது இல்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது வேதனையாக உள்ளது.

கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்துக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் துடைப்பத்தை வைத்து போஸ் கொடுக்கிறது மத்திய அரசு.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

.