This Article is From Mar 27, 2020

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அறிவிப்பு: ராமதாஸ் பாராட்டு!

ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500, மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும்!

Advertisement
இந்தியா Edited by

மத்திய அரசு ரூ.1.70 கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்

Highlights

  • மத்திய அரசு நிதியுதவி அறிவிப்பு: ராமதாஸ் பாராட்டு!
  • ரூ.1.70 கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
  • மூத்த குடிமக்களுக்கு ரூ.1000 வழங்குவது பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நிதியுதவிகளை அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று பிற்பகல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 36 மணி நேரத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது
என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது என பல்வேறு திட்டங்களை அறிவித்தார். 

இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 கோடி ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.1.70 கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாடும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்!

அடுத்த 3 மாதங்களுக்கு ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி, பருப்பு, ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500, மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும்!

Advertisement

அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பங்கையும், உரிமையாளர் பங்கையும் அரசே செலுத்தும் என மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!

வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75% தொகை அல்லது 3 மாத ஊதியத்தை பணியாளர்கள் முன்பணமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement