ஹைலைட்ஸ்
- தமிழக அரசு சார்பில் 5 இடங்கள் பரிந்துரை
- டிச., 2017க்குள் இடத்தை அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
- இன்னும் 3 மாதங்களுக்குள் அறிவிக்கப்படும் என்கிறது மத்திய அரசு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடம் குறித்து அறிவிப்பு வெளியிட 3 மாதங்கள் அவகாசம் கேட்டு, மத்திய காதாரத் துறை அமைச்சகம் உய்ர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இயக்குநர் சஞ்செய் ராய் இந்த மனுவை தாக்கல் செய்தார். இடம் தேர்வு செய்ய ரயில், விமானப் போக்குவரத்து வசதிகள் உள்பட பல விஷயங்களை ஆராய வேண்டும் என்பதால், அவகாசம் தேவைப்படுவதாக மனுவில் கூறியுள்ளார்.
தேர்வுக் குழு கூடிய விரைவில் எய்ம்ஸ் அமையப்போகும் இடத்தை முடிவு செய்யும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு, கே.கே ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவுக்கு பதில் மனுவாக மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக எய்ம்ஸ் அமைக்க, தமிழக அரசு சார்பில், தோப்பூர், புதுக்கோட்டை, செங்கிப்பட்டி, பெருந்துறை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களைப் பரிந்துரைத்திருந்தது.
2017 டிசம்பர் மாதத்துக்குள் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை அறிவிக்குமாறு, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அறிவிப்பு வெளியாகாததால், நீதிமன்ற அவமதிப்பு என, ரமேஷ் இந்த மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)