This Article is From Jul 19, 2018

கேரளா கன மழை: உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

கடந்த ஐந்து ஆண்டுகளில், 18% அதிக அளவு மழை கேரளாவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கேரளா கன மழை: உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு
Thiruvananthapuram:

திருவனந்தபுரம்: கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், அதிகாரிகள் நிவாரண பனியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா பகுதிகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பின்ராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

புதன்கிழமை அன்று, மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண குழு அனுப்பி வைக்குமாறு கேரள முதலமைச்சர் டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தில் மீனாச்சில் நதியில் இருந்து நீர் வெளியேறியதால், புதன் அன்று 10 இரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்தது. இதனால், இரண்டு நாட்களுக்கு குறைந்த அளவில் இரயில்கள் இயக்கப்பட்டன. கோட்டயம் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 18% அதிக அளவு மழை கேரளாவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளா மாநிலத்திற்கு தேவையான நிவாரண நிதி உதவிகளுக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைக்க, கேரளா அதிகாரிகள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.