This Article is From Jan 13, 2020

CAA விவகாரம் : 'இலங்கை தமிழர்களுக்கு தனி நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும்' : திருமா

காங்கிரஸ் தலைமையில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 6 முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.

CAA விவகாரம் : 'இலங்கை தமிழர்களுக்கு தனி நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும்' : திருமா

குடியுரிமை சட்ட திருத்தத்தால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் இலங்கை தமிழர்ளுக்கென தனி நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமா வளவன் வலியுறுத்தியுள்ளார். 

காங்கிரஸ் தலைமையில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 6 முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நாங்கள் இந்தியாவிலேயே இருக்க விரும்புகிறோம் என்று சொல்கிற ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் சரியானது. அதனை குடியுரிமை சட்ட திருத்தத்துடன் இணைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

இலங்கை தமிழர்களுக்கு தனித்து மத்திய அரசு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இங்கே தங்க விரும்புவோருக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இரட்டை குடியுரிமை வழங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்தியா, இலங்கை என இரு நாடுகளின் அரசும் கலந்து பேசி முடிவுக்கு வந்தால் மட்டுமே இரட்டைக் குடியுரிமை வழங்க முடியும்.

இவ்வாறு திருமா வளவன் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது- 

'பிரதமர் நரேந்திர மோடி தைரியத்துடன் பல்கலைக் கழக மாணவர்கள் முன் வந்து, எதனால் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது என்பதுபற்றி பேச வேண்டும். அவருக்கு அந்த தைரியம் கிடையாது. நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதுபற்றி மாணவர்களிடம் பேசுவாரா என்று சவால் விடுக்கிறேன்.

இளைஞர்களின் பிரச்னைகளை பேசுவதற்கு பதிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புதல் மற்றும் மக்களை பிளவு படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இளைஞர்களின் குரல் சட்டப்பூர்வமானது. அவர்களது பிரச்னைகள் ஆராயப்பட வேண்டும்'என்று பேசினார். காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 20 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து பேட்டி அளித்தார்.

அவர், 'நாடு முழுவதும் குடிமக்களின் ஆதரவுடன் இளைஞர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் நாடு முழுவதும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டிருப்பதை  இந்த போராட்டங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன' என்று தெரிவித்தார். 

.