This Article is From Nov 11, 2018

’அதிகாரம் மையமாக்கப்படுதல் இந்தியாவின் முக்கியப் பிரச்னை!’- ரகுராம் ராஜன் கருத்து

அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராஜன், ‘இந்தியாவைப் பொறுத்தவரை அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது

’அதிகாரம் மையமாக்கப்படுதல் இந்தியாவின் முக்கியப் பிரச்னை!’- ரகுராம் ராஜன் கருத்து

அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார் ரகுராம் ராஜன்

ஹைலைட்ஸ்

  • அதிகாரக் குவியலால் திட்டங்கள் தடைபடுகின்றன, ராஜன்
  • பிரதமர் 18 மணி நேரம் உழைத்தாலும் அது போதாது, ராஜன்
  • அதிகாரம் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும், ராஜன்
New Delhi:

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ‘இந்தியாவைப் பொறுத்தவரை அதிகாரம் ஒரே இடத்தில் குவிவது பெரும் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது' என்று பேசியுள்ளார்.

ஆர்.பி.ஐ வங்கிக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராஜன், ‘இந்தியாவைப் பொறுத்தவரை அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இதனால் அரசியல் முடிவுகள் எடுப்பதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது.

இந்தியாவின் பிரதமர் முடிவெடுக்கும் வரை, அதற்குக் கீழ் இருப்பவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்யும் அளவுக்கு ஒரு பிரதமர் இருந்தாலும், தேவையான முடிவுகளை உடனடியாக அவரால் எடுக்க முடியாது.

இந்தியா இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பில் தொடர்ந்து இயங்க முடியாது. நிர்வாக ரீதியாக இருக்கும் சுமையை பலர் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், இன்றைய மத்திய அரசோ அதிக அதிகாரங்களை தன்னுள் வைத்துள்ளது.

எந்தத் திட்டம் சீக்கிரம் செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமரே முடிவு செய்கிறார். உதாரணத்திற்கு, 'ஒற்றுமைக்கான சிலை' திட்டம் சீக்கிரமே முடிக்கப்பட்டது. இப்படி எல்லா திட்டங்களிலும் செயல்பட முடியுமா? அதிகாரம் பிரித்துக் கொடுக்கப்பட்டால் இந்தியா அடுத்தக்கட்டத்தை நோக்கி வளரும்' என்று பேசியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரகுராம் ராஜனின் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக் காலம் முடிந்தது. அவர் இரண்டாவது முறையாக பதவி நீட்டிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஆளுநரும் இப்படி செய்யவில்லை.

.