This Article is From Apr 25, 2020

மகாராஷ்டிராவில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!!

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்கு நலன் பலன் கிடைத்ததாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!!

6,430 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Mumbai:

மகாராஷ்டிராவில் கொரோனாவை எதிர்கொள்ள சோதனை அடிப்படையில் பிளாஸ்மா சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிகிச்சை நல்ல பலனை அளித்தால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை அனுமதி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுடன், மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப், வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மகாராஷ்டிரா பிளாஸ்மா சிகிச்சையை சோதனை முறையில் மேற்கொள்ள  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

6,430 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 4-ல் ஒரு பகுதியினர் மகாராஷ்டிராவில் உள்ளனர். 

முன்னதாக சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை செய்தது நல்ல பலனை அளித்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.  

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணம் அடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மா மூலக்கூறுகள் பெறப்பட்டு, அவை அதிகம் கொரோனா அதிகம் பாதித்தோரின் இரத்தத்தில் செலுத்தப்படும். குணம் அடைந்தவர்களின் இரத்தத்தில் தொற்றை எதிர்க்கும் சக்தி இருக்கும்.

இதனால் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா செலுத்தும்போது, அவர்கள் குணம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உலகில் முன்பு பல நோய்கள் தாக்கப்பட்டபோது, இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை கடைபிடிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்புக்கு பல்வேறு மருத்துவர்கள் பிளாஸ்மா முறையை கடைபிடிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். 

இருப்பினும் சோதனை முயற்சியாக இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது முழு வெற்றி அடைந்தால்தான், பிளாஸ்மா சிகிச்சையை பரவலாக்க அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கும்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லியில் சோதனை அடிப்படையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

நாட்டின் பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சையை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. இவை வெற்றி பெற்றால், மருந்து கட்டுப்பாடு கழகத்தின் அனுமதி தேவை. இந்த அமைப்பு இரத்த தானம் செய்வதற்கான விதிகளை தளர்த்தினால், பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிகளவு பெற முடியும்.


 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.