Read in English
This Article is From Oct 24, 2018

827 ஆபாச இணைய தளங்களை தடைசெய்ய கோரும் மத்திய அரசு!

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் 857 ஆபாச இணையதளங்களை தடைசெய்ய தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது

Advertisement
இந்தியா

தடைசெய்ய கோரிய 857 இணையதளங்களில், எந்த ஆபாச உள்ளடக்கம் இல்லாமல் 30 இணையதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

New Delhi:

உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆபாச உள்ளடக்கம் கொண்ட 827 வலைத்தளங்களைத் தடை செய்ய இணைய சேவை வழங்குநர்களிடம் அரசு ஆணையிட்டுள்ளது.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் 857 ஆபாச இணையதளங்களை தடைசெய்ய தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், எந்த ஆபாச உள்ளடக்கம் இல்லாமல் 30 இணையதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள 827 வலைத்தளங்களைத் தடுக்க தொலைத் தொடர்புத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் உத்தரவின் படி, 827 வலைத்தளங்களைத் தடைசெய்ய தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொலைத் தொடர்புத் துறை இணைய சேவை வழங்குநர்களுக்கு அளித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் கடந்த செப்.27,2018 அன்று பிறப்பித்த இந்த உத்தரவை தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் கடந்த அக்.8 அன்று பெற்றது.


 

Advertisement
Advertisement