உச்ச நீதிமன்ற தீர்ப்பை சனிக்கிழமை இன்று அறிவிக்கவுள்ளது. காலை 10.30க்கு தீர்ப்பை அறிவித்தது.
ஹைலைட்ஸ்
- அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு சட்டத்தை உருவாக்ககோரியிருந்தோம்
- உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பை மத்திய அரசு உரிமை கொண்டாட முடியாது
- இன்று இந்துக்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது
Mumbai: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் மத்திய அரசு “உரிமை கொண்டாட முடியாது” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தெரிவித்தார்.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு - ராம ஜென்ம பூமி வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை சனிக்கிழமை இன்று அறிவிக்கவுள்ளது. காலை 10.30க்கு தீர்ப்பை அறிவித்தது.
அயோத்தியில் ராமர் கோயில் நிர்மாணிப்பது குறித்து ஒரு சட்டத்தை உருவாக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரியிருந்தோம். ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவுள்ள நிலையில், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் மத்திய அரசு இந்த தீர்ப்பிற்கு உரிமை கோர முடியாது என்று தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக சிவசேனாவும் பாஜகவும் முரண்படுகின்றன. முதலமைச்சர் பதவியை சரிசமமாக பிரிக்க வேண்டுமென சிவசேனா வலியுறுத்தி வருகிறது.