This Article is From May 09, 2019

புதுச்சேரி அதிகார வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனு கொடுக்கபட்டது.

புதுச்சேரி அதிகார வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு
New Delhi:

புதுச்சேரி ஆளுநரான கிரண் பேடி அரசாங்கத்தின் அன்றாட நிகழ்வுகளில் தலையிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனு கொடுக்கபட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு இதனை அவசர வழக்காக கருதி எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று  மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் ஜெனரல் மேத்தா கேட்டுக் கொண்டார். அப்போது கோரிக்கை பரிசிலிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும் காங்கிரஸ் எம்எல் ஏவுமான கே.லட்சுமிநாராயணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

.