This Article is From Jan 03, 2020

குடியரசு தின அணிவகுப்பில் பீகார் மாநிலத்தையும் நிராகரித்தது மத்திய அரசு

இந்த நிராகரிப்பு என்பதை தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் மாபெரும் அணி வகுப்பில் பீகார் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்பதையே இது கூறுகிறது. 

குடியரசு தின அணிவகுப்பில் பீகார் மாநிலத்தையும் நிராகரித்தது மத்திய அரசு

‘ஜல்-ஜீவன் -ஹரியாலி அபியான்’ என்ற திட்டத்தின் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள பீகார் மாநிலம் கோரிக்கையினை முன்வைத்தது (File)

Patna:

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புக்கான ‘ஜல்-ஜீவன்-ஹரியாலி மிஷன்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட பீகார் அரசினால் முன்மொழியப்பட்ட அட்டவணை  மத்திய அரசின் ஆதரவை பெறத் தவறிவிட்டது என்று செய்தி முகமையான பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிராகரிப்பு என்பதை தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் மாபெரும் அணி வகுப்பில் பீகார் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்பதையே இது கூறுகிறது. 

டெல்லியின் பீகார் தகவல் மையத்தின் வட்டாரங்கள் பீகார் மாநிலம் நிராகரிப்பட்டதை உறுதிப்படுத்தின. பீகார் மாநிலம் தேர்ந்தெடுப்பதற்கான தேவையான தகுதியை பூர்த்தி செய்யவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசுமை மற்றும் நிலத்தடி நீர் அளவினை உயர்த்துவதற்காக 2019 அக்டோபரில் முதல்வர் நிதீஷ் குமார் அவர்களால் தொடங்கப்பட்ட ‘ஜல்-ஜீவன் -ஹரியாலி அபியான்' என்ற திட்டத்தின் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள பீகார் மாநிலம் கோரிக்கையினை முன்வைத்தது. 

எதிர்கட்சியான ஆர்ஜேடி மத்திய அரசு பீகார் மாநில மக்களை அவமானப்படுத்தியதாக தெரிவித்தது. 

மத்தியில் ஆளும் என்.டி.ஏ அரசு பீகார் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துக்கான கோரிக்கையை மறுத்தது. இப்போது குடியரசு தினத்தன்று பீகார் மாநிலத் திட்டத்தினை வெளிப்படுத்தும் வாய்ப்பினை தேசிய அணி வகுப்பில் நிராகரித்துள்ளது என்று ஆர்ஜேடியின் செய்தி தொடர்பாளர் மிருதுஞ்சன் திவாரி கூறினார். 

மத்தியிலும் பீகாரிலும் ஆளும் என்.டி.ஏ அரசு ஆளும் கூட்டணித் தலைவர்களால் மாநிலத்தின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு “இரட்டை இயந்திரம் கொண்ட அரசு என்று குறிப்பிடப்பட்டது.

.