எல்லை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 61 கிராமங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
New Delhi: எல்லை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ரூ. 113 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த தொகை எல்லை மாநிலங்களான அசாம், நாகலாந்து, சிக்கிம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் எல்லை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் அடிப்படையில், மொத்தம் 61 கிராமங்கள் மேம்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டில் மட்டும் சர்வதேச எல்லையை பலப்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 637 கோடியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்லை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எல்லையோர கிராமங்களில் சுகாதார மையங்கள், பள்ளிகள், குடிநீர் வசதி, சமூக நலக் கூடங்கள், கழிவு நீர் வடிகால்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படும்.
இதேபோன்று ஸ்வச் அபியான், ஸ்கில் டெவலப்மென்ட், விளையாட்டை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.