டிசம்பர் 1-ம்தேதி வரையில் 22,557 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
New Delhi: ஜம்மு காஷ்மீரில் 84 தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், 2019 ஆகஸ்ட் வரையில் 59 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி, மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-
ஜம்மு காஷ்மீல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் வழியே தீவிரவாதிகள் ஊடுருவ முயலும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு பாகிஸ்தான் நிதியுதவி உள்பட அனைத்து உதவிகளையும் செய்துள்ளது.
இந்திய எல்லைக்குள் ஊடுருவு 84 முறை முயற்சிகள் நடந்துள்ளன. இதன்படி சுமார் 59 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கக் கூடும்.
பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு, ரோந்து நடவடிக்கை காரணமாக ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு டிசம்பர் 1-ம்தேதி வரையில் மொத்தம் 22,557 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2005-ம் ஆண்டிலிருந்து 2019 அக்டோபர் 2019 வரையில் 1011 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,253 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் மூலமாக இந்தியாவுக்கு எதிராக மறைமகப்போரில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாக அங்கு வன்முறையைத் தூண்டும் தனது திட்டத்தை பாகிஸ்தான் நிறைவேற்றப்பார்க்கிறது.
இவ்வாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி கூறியுள்ளார்.