Read in English
This Article is From Jul 15, 2019

மே.வங்க அரசை குறி வைக்கிறது மத்திய அரசு : திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

Advertisement
இந்தியா Edited by

பத்து நாட்களில் 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளது என்று கூறினார்.

New Delhi:

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசை மத்திய அரசு குறி வைத்து வருகிறது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதீப் பாண்டியோபாத்யார் குற்றம் சாட்டியுள்ளார். பத்து நாட்களில் 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளது என்று கூறினார்.

வலுவான எதிர்ப்பை பதிவு செய்த அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயக அமைப்பை பாதிக்கின்றன என்றும், அதே கேள்விகளை மீண்டும் மீண்டும் சட்டசபையில் கேட்க அனுமதிக்க கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தினார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு தபால் துறை தேர்வு எழுத ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது குறித்து கண்டித்து கேள்வியினை எழுப்பினார். அகில இந்திய தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் எழுதலாம் என்று 2013 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் அரசாங்கம் அதை புறக்கணித்துள்ளது என்றார்.

Advertisement
Advertisement