Read in English
This Article is From Oct 11, 2018

நகர்புறங்களில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிப்பது குறித்த கலந்தாய்வு!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான ஆயத்த பணிகளை செய்ய ஒரு நல்ல முறையை கண்டறிய வேண்டுமென்று கூறினார்

Advertisement
இந்தியா

ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர், 200 பேர் உயிரிழந்தனர்.

New Delhi:

நகர்புறங்களில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிப்பது என்பது குறித்தஆலோசனையை வரையறுக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான ஆயத்த பணிகளை செய்ய ஒரு நல்ல முறையை கண்டறிய வேண்டுமென்று கூறினார்.

இன்று நகர்புறங்களில் ஏற்படும் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வில், நிபுணர்களால் ஒருசில வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட ஹர்தீப் சிங் பேசுகையில், நகர்புறங்களில் வெள்ளம் ஏற்படுவது அதிகரித்து வருவதாக கூறினார்.

மேலும், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுபோன்ற பேரிடர்களை சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கையை மேற்கொண்டுள்ளோமா என்ற சந்தேகம் வந்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் அவசர உதவிகள் மக்களை உடனே போய் சேருவதற்கான வழியை உண்டாக்க வேண்டுமென்று அவர் கூறினார்.

Advertisement
Advertisement