மு.க.ஸ்டாலினுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
New Delhi: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த மத்திய துணை ராணுவ பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒய் ப்ளஸ் எனப்படும் குறைந்த அளவிலான துணை ராணுவ கமாண்டோ படையினரும், ஸ்டாலினுக்கு இசட் ப்ளஸ் எணப்படும் அதிக எண்ணிக்கையிலான கமாண்டோ படையினரும் பாதுகாப்பு அளித்து வந்தனர்.
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்து. இதன் முடிவில் அவர்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டு வந்த துணை ராணுவ பாதுகாப்பை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
தமிழகத்தின் இரு முக்கிய அரசியல் தலைவர்களையும் துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீசின் கமாண்டோக்கள் பாதுகாத்து வந்தனர்.
துணை ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்ட போதிலும், தமிழக போலீசார் இந்த இரு தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வரையில், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.