செய்தியாளர் சந்திப்பில் மார்க் சக்கர்பெர்க்கும், சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க்கும் இதனை மறுத்துள்ளனர்.
San Francisco: ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்கை பதவி விலகச் சொல்லி முதலீட்டாளர்கள் அழுத்தம் தருவதாக வந்துள்ள செய்தி சிலிக்கான் வேலியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கார்டியன் இதழில் வந்துள்ள செய்தியில் ஜோனஸ் க்ரான் எனும் முதலீட்டாளர் மார்க் சக்கர்பெர்க்கை அழைத்து பதவி விலக சொன்னதாக கூறப்படுகிறது. "ஃபேஸ்புக் ஏதோ தனி அமைப்பாக செயல்படுகிறது; அது அப்படியில்லை.அது ஒரு நிறுவனம். அதற்கு சேர்மன் மற்றும் சிஇஓ தனித்தனியாக இருக்க வேண்டும். அதனால் மார்க் பதவி விலக வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டாளர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த சமூக வலைதளம் இப்போது நேரடியாக பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் மார்க் சக்கர்பெர்க்கும், சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க்கும் இதனை மறுத்துள்ளனர். இது ஆதாரப்பூர்வமற்ற மற்றும் பொய்யான தகவல் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்க தேர்தலுக்கு உதவிய விவகாரத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த தகவலால் ஃபேஸ்புக் பங்குகள் 3 சதவிகிதம் குறைந்து 139.53 டாலருக்கு வர்த்தகமானது. இது கடந்த ஏப்ரல் 2017க்கு பிந்தைய குறைந்த தொகையாகும்.