Read in English
This Article is From Sep 06, 2018

‘ரஷ்ய ஒப்பந்தம் குறித்து இந்தியா பேசும்!’- 2+2 பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா

இன்று இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 2+2 பேச்சு வார்த்தை நடந்து வருகிறது

Advertisement
இந்தியா
Washington:

இன்று இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 2+2  பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்காவின் ராணுவத் துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ், ‘ரஷ்யாவுடனான ராணுவ ஒப்பந்தத்தைப் பற்றி இந்தியா பேசும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் ராணுவத் துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் மைக் போம்பியோ ஆகியோர் நேற்று 2+2 பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள புது டெல்லி வந்தனர். அவர்கள் இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மேட்டிஸ், ‘ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்க உள்ள எஸ்-400 ரக விமானங்கள் குறித்து பேசப்படும் என்று நினைக்கிறேன். எது குறித்தும் பேச நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இரண்டு நாடுகளுக்கும் இறையாண்மை இருக்கிறது. எனவே இருவரும் தங்களுக்கு எது நல்லதோ அதைத் தான் செய்வர். அதனால், எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போக முடியும் என்று சொல்வதற்கில்லை. அதே நேரத்தில் இரு நாட்டு நட்புறவையும் பாதுகாக்க முடியும். முதலில் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து பிரதிநிதிகளுடன் பேசுகிறேன். அதன் பிறகு பொதுவில் அது குறித்து கூறுகிறேன்’ என்றார்.

Advertisement

இன்றும் நாளையும் நடக்கும் இந்த 2+2 சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

Advertisement
Advertisement