This Article is From Jul 11, 2018

கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும்

கடந்த ஏப்ரல் 2017 முதல் ஜனவரி 2018ம் ஆண்டு வரையில் ஈரான் 18.4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது

கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும்
New Delhi:

டெல்லி : ஈரானில் இந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த முயற்சித்தால் இந்தியாவிற்காக சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானில் சபாஹர் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு உதவுவதாக சொல்லிய இந்தியா இதுவரை எந்த உதவிகளையும் செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படி, கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த முயற்சித்தால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்றும் ஈரானின் துணைத் தூதர் மசூத் ரெஸ்வானியன் ரஹாஹி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை டெல்லியில் நடந்த வெளியுறவு கொள்கை குறித்தான மாநாட்டில் பேசிய ஈரான் துணைத் தூதர் மசூத் ரெஸ்வானியன் ரஹாஹி, கடந்த 2016ம் ஆண்டு கையெழுத்தான இந்திய, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் உதவுவதாக தெரிவித்திருந்த இந்திய அரசு இதுவரை அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து பேசுகையில், ஈரான் எப்போதும் இந்தியாவிற்கு நம்பிக்கையான பங்களிப்பாளராகவே இருந்து வருகிறது. அமெரிக்காவின் வழிகாட்டுதலில்படி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைக் கைவிட்டு ஈரான், சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா முயற்சித்தால், இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகளை ஈரான் ரத்து செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் துணைத் தூதரின் இந்த பேச்சு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளை அடுத்து ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் 2017 முதல் ஜனவரி 2018ம் ஆண்டு வரையில் ஈரான் 18.4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

முன்னதாக அமெரிக்கா அதிபராக இருந்த ஒபாம 2015ம் ஆண்டு கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியேறியது மட்டுமில்லாமல், ஈரானுடனான உறவை கைவிடுமாறு தனது நட்புறவு நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.