This Article is From Jun 17, 2018

இந்திய பொருளாதார வளர்ச்சி இரண்டு இலக்கங்களை அடைய வேண்டும்:பிரதமர் மோடி

116 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் மனித வள மேம்பாடு மற்றும் பிற வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர உள்ளது மத்திய அரசு.

இந்திய பொருளாதார வளர்ச்சி இரண்டு இலக்கங்களை அடைய வேண்டும்:பிரதமர் மோடி

PM Modi made the statement at the fourth meeting of the NITI Aayog Governing Council.

ஹைலைட்ஸ்

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும்
  • நிதி அயோக் ஆட்சி குழு வரலாறு காணாத மாற்றங்களை உருவாக்கும்
  • 45,000 கிராமங்களில் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
New Delhi:

புது டில்லியில் நடைப்பெற்ற நான்காவது நிதி அயோக் பொது கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். கூட்டதின் முக்கிய அம்சமாக, இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காண திட்டங்கள் வகுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

2017-18 ஆம் ஆண்டின் நாலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவிதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரண்டு இலக்க எண்களுக்கு கொண்டு செல்ல தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

விவசாயிகள் வருமாணம் இரட்டிப்பு, மாவட்டங்களின் முன்னேற்ற வளர்ச்சி, ஆயூஷ்மான் பாரத், இந்திராதனுஷ் திட்டம், ஊட்டச்சத்து திட்டம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவு கொண்டாட்டம் என முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘இந்தியா 2020’ திட்டத்தை நோக்கி பயணிக்க இந்த நிகழ்வுகள் உதவும் என பிரதமர் தெரிவித்தார்.

 

இந்திய பொருளாதர வளர்ச்சியில் ‘வரலாறு காணத மாற்றங்களை’ கொண்டுவர இந்த அரசியல் மேடை பயன்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் முதலமைச்சர்களுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என உறுதியளித்தார்.

 

தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனை, திறன் வளர்ச்சிகள் ஆகிய முக்கிய திட்டங்களின் கொள்கை உருவாக்கங்களுக்கு மாநில முதலமைச்சர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் பரிந்துரையின் அடிப்படையில் துணை குழுக்கள் உருவாக்கி பணியாற்றி வருகின்றனர். ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்,  நாடெங்கிலும் 1.5 லட்சம் ஆரோக்கியம் மற்றும் சுகாதார மையங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

சமக்ரா சிக்‌ஷா அபியன் திட்டத்தின் கீழ், குழந்தைகளின் கல்வி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். ஆண்டிற்கு, 5 லட்சம் ரூபாய் செலவில் 10 கோடி குடும்பத்தினருக்கு சுகாதார ஆரோக்கியம் உறுதியளிக்கப்படும் என்றார்.

 

முத்ரா யோஜ்னா,ஜன் தன் திட்டம், ஸ்டாண்டு அப் இந்தியா ஆகிய திட்டங்கள் இந்திய நாட்டின் நிதி வளர்ச்சிக்கு உதவும் என பிரதமர் தெரிவித்தார்.

 

116 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் மனித வள மேம்பாடு மற்றும் பிற வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர உள்ளது மத்திய அரசு.

 

கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் மூலம், 45,000 கிராமங்களில் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

 

இந்தியாவில் உள்ள திறன்கள், கொள்ளளவு, வளங்கள் ஆகியவற்றுக்கு பஞ்சம் இல்லை எனவும், இந்த நிதி ஆண்டில் 11 லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க உள்ளது. கடந்த ஆட்சி அரசை காட்டிலும், 6 லட்சம் கோடி உயர்த்தி அளிக்கப்பட உள்ளது.

 

நாள் முழுதும் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள்,  மத்திய அமைச்சர்கள், மற்றும் நிதி அயோக் அதிகாரிகள் பங்கேற்றனர்.





















 
.