This Article is From Dec 26, 2018

சீனாவுக்கு சவால் : போர் விமானங்கள், பீரங்கிகளை தாங்கும் சக்திகொண்ட அசாம் மேம்பாலம்

போகிபீல் ரயில் மற்றும் சாலை மேம்பாலமானது இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியில் பலம் அளிக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

சீனாவுக்கு சவால் : போர் விமானங்கள், பீரங்கிகளை தாங்கும் சக்திகொண்ட அசாம் மேம்பாலம்

பிரம்ம புத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் நாட்டிலேயே நீளமான ரயில் மற்றும் சாலை மேம்பாலம்

ஹைலைட்ஸ்

  • போர் விமானங்கள், ராணுவ டாங்கிகளை தாங்கும் சக்தி இந்த பாலத்திற்கு உண்டு
  • அருணாசல பிரதேசத்திற்கு படைகளை விரைந்து அனுப்ப உதவும்
  • அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை தனதாக்கிக் கொள்ள சீன முயல்கிறது
Bogibeel, Dibrugarh:

சீனாவின் அச்சுறுத்தலுக்கு சவால் விடுக்கும் வகையில் அசாம் போகிபீல் ரயில் மற்றும் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாலத்தில் ஜெட் விமானங்களும், போர் டாங்கிகளும் சர்வ சாதாரணமாக செல்லலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலை மேம்பாலத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதன் நீளம் 4.9 கிலோ மீட்டர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்ட இந்தப் பாலத்திற்கு ஆன செலவு ரூ. 5,600 கோடி.

திப்ருகர் நகரம் அருகே இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக அருணாசல பிரதேசத்திற்கு ராணுவத்தை விரைந்து அனுப்பி வைக்க முடியும். அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தனதாக்கிக் கொள்ள முயற்சி செய்து வருகிறது.

s34on3gg

இந்த சூழலில், போகிபீல் மேம்பாலமானது இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியில் பலமான ஒன்றாக அமைந்து விடும். இதன் மூலம் அருணாசல பிரதேசத்தின் தலைநகர் இடா நகருக்கு செல்ல 750 கிலோ மீட்டர் தூரமே தேவைப்படும்.

இந்தியாவில் 60 டன் (60 ஆயிரம்) கிலோ எடை கொண்ட டாங்கிகள் தான் அதிக எடை கொண்டவை. இவை செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. போர் விமானங்களை நிறுத்தும் வசதியும் இந்தப் பாலத்தில் உள்ளதால், நிச்சயமாக சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு பக்க பலமாக போகிபீல் பாலம் அமையும்.

முன்னதாக கடந்த 2017-ல் அசாம் மற்றும் அருணாசல பிரதேசத்தை இணைக்கும் வகையில் 9.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாலத்தை மத்திய அரசு அமைத்தது.

.