हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 21, 2019

உ.பி.யில் ஒரு மின் விசிறி, மின் விளக்கும் பயன்படுத்தும் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.128 கோடி மட்டுமே....!

மின்வாரியத்துறையினரிடம் இதுகுறித்து கேட்டபோது “தொழில்நுட்ப கோளாராக இருக்கலாம். விரைவில் ஆய்வு செய்து முறையான பில் கொடுக்கப்படும்”என்று தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

ரூ. 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

New Delhi:

உத்திர பிரதேசத்தில் 128 கோடி மின்சார கட்டணம் செலுத்தும்படி முதியவர் ஒருவருக்கு பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம்.  சமீபத்தில் இவர் வீட்டுக்கு மாதாந்திர மின்சார கட்டண பில் வந்துள்ளது. அதில் அவர் ரூ. 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு ஷமீம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மின்சார கட்டணம் செலுத்தாததால் வீட்டுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 
எங்கள் வீட்டில் மின் விசிறி மற்றும் மின் விளக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். பின் எப்படி எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை வரமுடியும்? சராசரியாக மாதத்திற்கும் ரூ. 700 அல்லது ரூ.800 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும். என் புகார் செய்த போது ஒருவரும் மின் வாரியத்தில் கேட்கவில்லை என்கிறார்.

மின்வாரியத்துறையினரிடம் இதுகுறித்து கேட்டபோது “தொழில்நுட்ப கோளாராக இருக்கலாம். விரைவில் ஆய்வு செய்து முறையான பில் கொடுக்கப்படும்”என்று தெரிவித்தார். 

இதேபோல் சம்பவம் கடந்த ஆண்டு உத்திர பிரதேசத்தில் காய்கறி கடை வைத்திருக்கும் ஜெகன்னாத் என்பவருக்கு ரூ. 8.64 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்தது. இது தொடர்பாக அவர் மின் வாரியத்திற்கு பலமுறை அலைந்து திரிந்துள்ளார். பலனில்லாத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது பில்லில் தசமபுள்ளி விடுபட்டு போனதில் நடந்த தவறு என்று கூறி மின் வாரிய கணக்கர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாக மின் வாரியம் தெரிவித்தது. 

Advertisement