This Article is From May 12, 2020

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய, லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தில் வேலூர், சேலம், தர்மபுரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்பதால் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

.