This Article is From Aug 04, 2020

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்க வாய்ப்புள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Posted by

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறும்போது, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பலத்த காற்று மற்றும் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல், தென்கிழக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மேற்குவங்கக் கடலோரப் பகுதிகளான அந்தமான் நிக்கோபர் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழை பெய்யும் என்பதால், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரியும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசஸ் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement