This Article is From Aug 01, 2020

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வடகடலோர மாவட்டங்கள் மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான, சில நேரம் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வடகடலோர மாவட்டங்கள் மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது

Advertisement

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, மன்னார் வளைகுடா, அந்தமான், தெற்கு-மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement