This Article is From Apr 11, 2020

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு
  • நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும்
  • சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் பரவலாகக் கோடை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்தது. இதேபோல், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. 

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். 

மேலும் குமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காற்று மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தேனி, திருப்பூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இடியுடன் மழை பெய்தது. 

சென்னை, புறநகர் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வட சென்னை பகுதிகளான திருவொற்றியூர், மாதவரம், மணலி, மாத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டம் தீர்த்த மலை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 

வெயிலின் தாக்கம் தணிந்ததால், 2 வாரங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

.