This Article is From Apr 16, 2020

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாட்டங்களிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
  • அடுத்தடுத்த நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும்
  • தென்மாட்டங்களிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சித்திரை மாதம் வெயில் தொடங்கியுள்ளதால், அடுத்தடுத்த நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களிலும், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாட்டங்களிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விருதுநகர், கரூர், மதுரை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் எனவும், அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. பசிபிக் பெருங்கடல்-இந்திய பெருங்கடல் பகுதிகளில் வீசும் காற்றின் போக்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஜூன் முதல் வாரம் பருவ மழை தொடங்கிவிடும். அநேகமாக ஜூன் 4ம் தேதி பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 

.